புதிய சிறந்த அழகிய தமிழ் கவிதைகள் இங்கு படிக்கலாம்!
பொருட்களை உபயோகியுங்கள்…
நேசிக்காதீர்கள்!
மனிதர்களை நேசியுங்கள்…
உபயோகிக்காதீர்கள்!
பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது…
வறுமையால் ஒன்றையும் வாங்க முடியாது!
பாதை இல்லை என்றாலும்..
உனது பாதங்களை பதிய வை…!
புதிய பாதை ஆகட்டும்…
பிறரை பார்த்து பார்த்து
நீ அவர்களைப்போல் வாழ்ந்தால்..
உன்னைப்போல் யார் வாழ்வது?
ஆகையால் நீ நீயாகவே இரு…!
நீ நீயாக இருக்க…
நான் நானாக இருக்க…
நமக்குள் இருப்பதுதான் காதல்!
நிலவை
அழகாக்க
இருளை பூசிக்கொண்டது
இரவு..
பிறர்க்கு தருவதற்கு
ஒன்றும் இல்லை
எனிழும் கனிவான
வார்த்தைகளை பேசுங்கள்…
விட்டுக் கொடுக்கலாம்
அல்லது
விட்டு விடலாம்
நிம்மதி நிலைக்கு
தருபவரை
ஏழை ஆக்காமல்
வாங்குபவரை
செல்வந்தர் ஆக்கும்
ஒரே செயல்
புன்னகை மட்டுமே…!
பிறரால் ஏற்படும் தனிமையில்
நாம் நம்மை அறியலாம்
நாமாக எடுக்கும் தனிமையில்
உலகை ரசிக்கலாம்…!
எட்டி பிடிக்கும் துளையில்
வெற்றியோ தோல்வியோ
இல்லை கற்பனையை தவிர
அறிவுரைகளால்
புரிந்து கொள்பவரை விட
அனுபவத்திலிருந்து
தெரிந்து கொள்பவரே
மனதாலும் அறிவாலும்
பலசாலியாகிறார்கள்…!